தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓவியர் இளையராஜா மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல் - ஓவியர் இளையராஜா மறைவு

சென்னை: ஓவியர் இளையராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஓவியர் இளையராஜா மறைவு
ஓவியர் இளையராஜா மறைவு

By

Published : Jun 7, 2021, 1:31 PM IST

சென்னையில் ஓவியர் இளையராஜா (43) கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று (ஜுன்.6) உயிரிழந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:

'தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!' என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கில் தளர்வுகள்: குவிந்த மக்களால் முடங்கிய இ-பதிவு தளம்

ABOUT THE AUTHOR

...view details