இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.ஆர். ராதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா மறைவு: ஸ்டாலின் இரங்கல் - MK Stalin condolence press release
சென்னை: தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
MK Stalin condolence press release
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவரும், சட்டப்பேரவையில் பழுத்த அனுபவம் உள்ளவருமான எஸ்.ஆர். ராதா பழகுவதற்கு இனிமையானவர். ஆக்கப்பூர்வமான சட்டப்பேரவை விவாதங்களில் ஈடுபாடு கொண்டவர். தொகுதி மக்களின் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி மக்களின் அன்பைப் பெற்றவர்.
சட்டப்பேரவை ஜனநாயக மரபுகளை நன்கு அறிந்த எஸ்.ஆர்.ராதா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.