தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் தாயார் மறைவு: ஸ்டாலின் இரங்கல்! - சேலம் தனியார் மருத்துவமனை

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தாயார் மறைவிற்கு, ஸ்டாலின் இரங்கல்!
முதலமைச்சர் தாயார் மறைவிற்கு, ஸ்டாலின் இரங்கல்!

By

Published : Oct 13, 2020, 10:35 AM IST

சேலம் தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவசாயி அம்மாள் நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயார் தவசாயி அம்மாள் மறைவிற்கு, தமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் தனது 93ஆவது வயதில் மறைவு எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details