சென்னை: தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாடலாசிரியராக திகழ்ந்து வந்த கவிஞர் பிறைசூடன் நேற்று (அக்.8) மாலை 4.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 65.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் பிறைசூடனின் இல்லத்திற்கு இன்று (அக்.9) நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கவிஞர் பிறைசூடன் இயற்றிய ராஜாதி ராஜா திரைப்படத்தின் மீனம்மா மீனம்மா, என்னை பெத்த ராசா திரைப்படத்தின் சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி, ஆட்டமா தேரோட்டமா, நடந்தால் இரண்டடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ் ரசிகர்களிடத்தில் இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.
கவிஞர் பிறைசூடன் மறைவு