இதற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன், பாடகி சின்மயி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரைதற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சி தெரிவித்திருந்தது. இதையடுத்துநடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனதுட்விட்டர் பக்கத்தில்கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம்! - திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
சென்னை: தனியார் ஓட்டலில் 'கொலையுதிர் காலம்' படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் ராதாரவிக்கு கண்டனம். திரைத்துறை சார்ந்த பெண்கலைஞர்கள் பற்றி ராதாரவி கூறிய கருத்தை ஏற்க இயலாது. திமுகவினர் கண்ணியம் குறையாமல் கருத்துகளை வெளியிட வேண்டும். கண்ணியம் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத்தெரிவித்துள்ளார்.