பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பொங்கல் விடுமுறை தினமான 16ஆம் தேதி அன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் ஆற்றும் உரையைக் மாணவர்கள் அனைவரும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இடையில் பள்ளிக்கு வந்து கேட்க வேண்டும் என்று அரசு ஆணையிடுவது மிகுந்த வேதனைக்குறியது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவ மாணவிகள் மத்தியில் கல்வியைக் காவி மயமாக்கவும் தமிழர்களின் தொன்மை விழாக்களைச் சீரழிக்க வழிவகுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
பாஜகவின் பிரச்சாரத்திற்காக அரசுப் பணத்தைச் செலவழிப்பது உள்பட, எதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது என்பது தெரியவருகிறது.