தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை அதிபரின் நடவடிக்கையை கண்டித்து ஸ்டாலின் அறிக்கை! - இலங்கை அதிபரின் நடவடிக்கையை கண்டித்து ஸ்டாலின் அறிக்கை

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ குவிப்புக்கும், தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டத்தை தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin

By

Published : Nov 24, 2019, 5:10 PM IST

இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தமிழர்கள் மீதான பார்வை குறித்தும், தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், “இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் இனிமேல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்" என்று அறிவித்துள்ளதற்கும், தமிழர் பகுதிகளில் உள்ள தெருக்களின் தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் ராஜபக்சே ஆகியோர் பதவிப் பொறுப்பேற்ற ஈரம் காய்வதற்குள், தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி அவர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் பணி வேகமாகத் தொடங்கி விட்டதும், இந்தியாவின் அப்பாவி மீனவர்களின் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதுமான அநியாயம், உலகத் தமிழர் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கை பிரதமர் நடவடிக்கையை கண்டித்து ஸ்டாலின் அறிக்கை

இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்ச குடும்பத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடி குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து, அதன் எதிர்காலப் பரிமாணங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து, ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும், அரசமைப்புச் சட்ட ரீதியிலான உரிமைகளுடன் அமைதியாக வாழ்வதற்கும், அவர்கள் விரும்பும் தீர்வு ஏற்படுவதற்கும், ஆவன செய்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை, மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் தேர்தல் முடிந்தவுடன், தமக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரிடத்தும் சமமாக நடந்து கொள்வேன் என கோத்தபய அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்திடக் கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி, ஈழத்தமிழர் பிரச்னையை புதிய அதிபரிடம் உரிய முறையில் எடுத்துரைத்து, ஈழத் தமிழர்களுக்கு உதவிடும் அக்கறையான நடைமுறையை மேற்கொள்ள பெரிதும் வலியுறுத்துவார் என நம்புகிறேன் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details