ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆளுநரிடம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
இதையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், "பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.