தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகைசால் தமிழர் விருது உருவாக்கம்- தமிழ் தொண்டாற்றுபவர்களுக்கு கௌரவம்! - MK Stalin

தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்களித்தவர்களை பெருமைப்படுத்த புதிதாக 'தகைசால் தமிழர்' விருது உருவாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
MK Stalin

By

Published : Jul 27, 2021, 2:35 PM IST

சென்னை:தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்ய முதலமைச்சர் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் இந்த விருதை பெறுபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படும். தமிழ் தொண்டாற்றியவர்களை கௌரவிக்கும் இந்த விருது தற்போது பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 21 எழுத்தாளர்களுக்கு விருது!

ABOUT THE AUTHOR

...view details