தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாட்னா கூட்டத்தில் விவாதித்தது என்ன? - சென்னை திரும்பிய முதலமைச்சர் கூறிய தகவல்! - மு க ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றையும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களையும் காப்பாற்றப்பட வேண்டுமானால், பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் பாஜகவை வீழ்த்துவது தான் அனைத்து கட்சிகளின் ஒரே இலக்காக உள்ளதாகவும் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 23, 2023, 9:06 PM IST

Updated : Jun 23, 2023, 9:49 PM IST

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை:2024 மக்களவை பொதுத் தேர்தலில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. நாடெங்கும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இதற்கான செயல்பாடுகளில் தீவிரமாக இயங்க தொடங்கியுள்ளன.

இதன் ஒருபகுதியாக, பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஆலோசனையில் ஈடுபட திட்டமிட்டனர். இந்த நிலையில், பிகார் மாநிலத்தின் பாட்னாவில் இன்று (ஜூன் 23) நடைபெற்ற இந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் தமிழ்நாட்டின் திமுக, மேற்குவங்கத்தின் திரிமுணால் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அதேபோல், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை நிதீஷ்குமார் வரவேற்று சிறப்பித்தார். குறிப்பாக, இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் பல்வேறு கட்சி நிர்வாகிகளை சேர்ந்தவர்களுடன் பீகார் மாநில பாட்னாவில் நடைபெற்றதாகவும், இந்தக் கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக அமைந்ததாக தெரிவித்தார்.

அங்கு தேசிய தலைவர்கள் அனைவரையும் சந்தித்ததாகவும், நேற்று பாட்னா சென்றவுடன் லாலு பிரசாத் யாதவ் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன் என்றார். ஒன்றிய பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்த கூட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டியிருந்ததாகவும், பாஜக என கூறுவதால் இது தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டம் என யாரும் நினைக்க வேண்டாம் என்று கூறினார். இந்தியாவின் ஜனநாயகத்தையும் மக்கள் ஆட்சியையும் மதச்சார்பின்மையும் பன்முகத்தன்மையும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றப்பட வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என அனைத்து கட்சிகளும் மிகுந்த தெளிவாக இருப்பதாகவும், இதில் நான் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2023-ல் கூடியவர்கள், அடுத்தாண்டு 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என கூட்டத்தில் அழுத்தமாக பேசியதாக நம்பிக்கை தெரிவித்தார். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை தான், தமிழ்நாட்டில் அமைந்த அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளதாகவும், அகில இந்திய அளவிலும் இதே ஒற்றுமை தான் வலிமை எனவும் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எந்த மாநிலத்தில் எந்த கட்சி வலிமையாக உள்ளதோ? அந்த கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் எனவும், கூட்டணி அமைக்க முடியவில்லை என்றால் தொகுதி பங்கீடு மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பது சரியான நிலைப்பாடாக இருக்காது எனக் கூறியதாக தெரிவித்தார். அரசியல் கட்சிகள் இடையே குறைந்தபட்சம் செயல்திட்டம் இருத்தல் வேண்டும் என்றும் இது போன்ற ஏழு பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் எடுத்துரைத்ததாக பேசினார்.

பாஜகவின் வீழ்ச்சியே ஒற்றை இலக்கு: ஆளும் பாஜகவை வீழ்த்துவதை அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளதாகவும், ஆகவே பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று பட வேண்டும் என நினைத்தாக கூறிய அவர் அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை நிச்சயமாக, அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார். மேலும், அடுத்தடுத்த நடவடிக்கைகளை பின்னர் தெரிவிக்கப்படும் பாட்னாவில் கூடிவிட்டு மகிழ்ச்சியாக அனைவரும் திரும்பி உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் வாயிலாக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு இப்போதுதான் கருவாகியுள்ளதாகவும், அது உருவாக சில மாதங்கள் ஆகும் என்றார்.

அந்த கூட்டத்தில் அனைவருக்கும் நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் கலந்து கொண்டதாகவும், பிறகு மதிய உணவுக்கு பிறகு தான் செய்தியாளர் சந்திப்பு நடத்தியதாகவும், ஆனால் தனக்கு விமானத்திற்கு நேரமாகிவிட்டதால் அனைவரிடம் கூறிவிட்டு சாப்பிடாமல் கூட விமானம் ஏறுவதற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். எந்த ஒரு உள் நோக்கத்தோடும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் வரவில்லை என்றும் தற்போது தான் முதல் கூட்டத்தை கூட்டி உள்ளோம் என்றார். இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்கப்படும் என்றும் இன்னும் பிரதமர் வேட்பாளரை உறுதி செய்யப்படவில்லை" என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க: Opposition Meeting: பாஜகவுக்கு எதிராக விறுவிறுப்படையும் எதிர்கட்சிகள் கூட்டம்

Last Updated : Jun 23, 2023, 9:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details