முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் 51ஆவது நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
சேப்பாக்கத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து மலர் வளையம் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
திமுக அமைதிப் பேரணிக்காக காவல் துறையினர் போக்குவரத்துக்கு தடை விதித்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி இதையும் படிங்க:பெட்ரோலிய பொருள்களைச் சேமிக்க விழிப்புணர்வு பேரணி