தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணாமல்போன மகனை தேடிய பெற்றோர்: இரவு வீடு திரும்பிய சிறுவன்!

சென்னை: பெரவள்ளூர் அருகே தாயுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் பூங்காவிற்குச் சென்ற சிறுவனை, காவல் துறையினர் தேடிவந்த நிலையில் சிறுவன் இரவு வீட்டிற்கு வந்தடைந்தார்.

காணாமல் போன மகனை தேடிய பெற்றோர்
காணாமல் போன மகனை தேடிய பெற்றோர்

By

Published : Feb 2, 2021, 1:22 PM IST

சென்னை பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளார். இவர், கெல்லீஸ் பிளான்சன் கார்டன் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில், சிறுவன் நேற்று (பிப். 01) காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், பள்ளி முடித்து குறிப்பிட்ட நேரத்தில் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர். சிறுவன் பள்ளி முடிந்தவுடன் கிளம்பிவிட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுவனைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், சிறுவன் நேற்றிரவு 9 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து, காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுவனுக்கும் அவரது தாய்க்கும் நேற்று (பிப். 01) காலை பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், கோபித்துக்கொண்டு பள்ளி முடிந்ததும் அருகிலுள்ள பூங்காவுக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டு, பூங்கா மூடப்பட்ட பிறகு வீட்டிற்கு வந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: சென்னையில் சிறுவன் கடத்தல்: 3 பேர் துப்பாக்கி முனையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details