இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் வெகு நாட்களாக பேசப்பட்ட பின் நடந்ததேறியது. இந்நிலையில், தற்போது இந்த ஜோடி வாடகைத்தாய் முறையின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். இந்நிலையில், இது தற்போது சமூக வலைதளத்தில் பரவலாகப்பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களிடையும், நெட்டிசன்களிடையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
விக்கி - நயன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றவிவகாரம்; 'விளக்கம் கேட்கப்படும்...!' - அமைச்சர் மா.சு
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி வாடகைத் தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகள் பெற்றுள்ள விவகாரம் குறித்து அவர்களிடத்து விளக்கம் கேட்கப்படுமென அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “ வாடகைத் தாய் என்பது விதிமுறைக்குள் உள்ளதா என்பதே விவாதத்திற்குள்ளானது தான். விதிமுறைகளின்படி 21 வயது முதல் 36 வயது வரை உள்ளவர்கள் கருமுட்டைகள் தரலாம். அதற்கு பெற்றோர் மற்றும் கணவரின் ஒப்புதல்கள் இருந்தால் போதுமானது தான். மேலும், அதைப் பற்றி அவர்களிடத்து விளக்கம் கேட்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்… ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி