சென்னைமாநகரில் வந்த இளைஞர், கணவரை பிரிந்து 13 வயது மகளுடன் வசித்து வரும் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இரண்டாவது மனைவியின் மகளை, அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வளர்ப்புத்தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.