சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதை கழிக்க பொது கழிப்பிடத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் பச்சையப்பன்(29) என்பவர் மதுபோதையில் சிறுமியை கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமைடந்த சிறுமி, பச்சையப்பன் முகத்தில் எச்சை துப்பியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் கன்னத்தில் பச்சையப்பன் அறைந்துள்ளார். இதில் சிறுமியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டு வீங்கியுள்ளது. இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.