சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அவருடைய எல்லைப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘13 வயதுடைய எனது மகள், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரை காணவில்லை. உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் செல்போன் டவர் மூலமாக விசாரணையை தொடங்கினர். அப்போது மகாபலிபுரம் அருகே சிக்னல் காட்டியுள்ளது. இதனையடுத்து நேற்றைய முன்தினம் (ஜன.26) மகாபலிபுரம் பகுதியில் உள்ள விடுதிகளை திடீரென காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு சிறுமி இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தப்ப முயன்ற இளைஞரை பிடித்த காவல் துறையினர், பின்னர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்டவர் செங்கல்பட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது.