சென்னை: மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள டொவினோ தாமஸ் தனுஷின் மாரி 2 இல் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் குஞ்சிராமாயணம், கோதா ஆகிய படங்களை இயக்கிய பாசில் ஜோசப் இயக்கும் மின்னல் முரளி திரைப்படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.