சென்னை: குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரியில், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், தனியார் நிறுவன மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் எம்.எல்.ஏ.கணபதி ஆகியோர் போரூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “போரூர் ஏரியின் பரப்பளவு 252 ஏக்கர். அரை ஏக்கர் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 200 ஏக்கர் குப்பை கொட்டும் இடமாகவும், மரம் செடிகள் வளர்ந்த இடமாகவும் மாறியுள்ளது.