சென்னை:முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. கடந்த ஜூன் 13ஆம் தேதி இவரது வீடு, சகோதர் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அவரை கைது செய்தனர்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை பதவி நீக்கம் செய்திருந்தார். பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களிலேயே மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்ததை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.