சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதில் அமைச்சர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், கரூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு 320 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதேபோல் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி 167 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.