தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஆய்வு! - சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மையம் ஆய்வு

சென்னை: அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கரோனா கண்டறியும் சோதனை செய்யப்படும் இடத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் நேரில் ஆய்வுசெய்தார்.

அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

By

Published : May 11, 2020, 10:48 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவரவும், மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் வெளிநாட்டுப் பயணிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு அழைத்துச்செல்லவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின்படி சிறப்பு விமானங்கள் மட்டும் இயங்கிவருகின்றன.

இதனால் இவர்களுக்குச் சென்னை விமான நிலையத்தில் சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை, கரோனா தீநுண்மி பரிசோதனை நடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். மேலும் இந்தக் கரோனா பரிசோதனை மையத்தை பல்வேறு உயர் அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மருத்துவர் சி. விஜய பாஸ்கர், சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யும் இடத்தைப் பார்வையிட்டு, ஆய்வுசெய்து மருத்துவர்கள், விமான நிலைய அலுவலர்களின் பணிகளுக்குத் தேவையானதை செய்திட வேண்டுமென தகுந்த அறிவுரை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details