தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு அறைக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் திடீர் ஆய்வு! - corona control room at dms
சென்னை: கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் விஜய பாஸ்கர் திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
vijayabaskar
இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையில் கரானோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு செய்தார்.
அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் குறித்தும், மாவட்ட அளவில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.