ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் - Minister Vijayabaskar press release

சென்னை: கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்திக்குறிப்பு
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்திக்குறிப்பு
author img

By

Published : Jul 31, 2020, 7:31 PM IST

கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன்பேரில் அரசு மருத்துவமனைகளில் ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கோவிட்-19 நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கேற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை “ஆரோக்கியம்” திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
இதனையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது. சிறுவில்வம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கஷாயம், கடுக்காய் உள்ளிட்ட 27 பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயணம், வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

இவற்றை காலை, இரவு என இருவேளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்தவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு அரசால் சித்தா மருந்தான கபசுரக் குடிநீரும், ஓமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30சியும் எவ்வித கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

இது போன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இ-பாஸ் சிரமங்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details