தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் பொய் பரப்புகிறார் - அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு! - மருத்துவர்கள் உயிரிழப்பு

உதயநிதி ஸ்டாலின்  dmk udhayanidhi stalin  minister vijayabaskar  மருத்துவர்கள் உயிரிழப்பு  உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
உதயநிதி ஸ்டாலின் பொய்யை பரப்புகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

By

Published : Aug 4, 2020, 6:23 PM IST

Updated : Aug 4, 2020, 8:28 PM IST

18:08 August 04

சென்னை: கரோனாவை எதிர்த்து போராடும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் 43 பேர் உயிரிழந்ததாக உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்திருப்பது உண்மைக்குப் புறம்பானது என அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உதயநிதியை குற்றஞ்சாட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள் அதிகளவில் உயிரிழந்ததாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 3) ட்வீட் செய்திருந்தார். மேலும், அந்த ட்வீட்டில் இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றையும் பதிவிட்டிருந்தார். 

இது கடும் விவாதத்தை கிளப்பியிருந்தது. இந்தச் சூழ்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கும் ட்வீட் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் மக்களிடையே பொய்யான செய்தியைப் பரப்புவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கரோனா பாதிப்பு குறித்து இன்று (ஆகஸ்ட் 4) செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். பொதுமக்கள் பீதி அடைய கூடிய தகவலை யார் வெளியிட்டாலும் அது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், தவறான தகவல் வெளியிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது மருத்துவர்களின் மனநிலையை குலைக்கக் கூடிய செயல் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:விபத்தில் சிக்கிய தூய்மை பணியாளரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்!

Last Updated : Aug 4, 2020, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details