சென்னை சேத்துபட்டு தனியார் பள்ளியில் உலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.
உலக உணவு பாதுகாப்புத் தொடர்பான உறுதிமொழியை மாணவ, மாணவியர் ஏற்றனர். தொடந்து உணவு பண்டங்களில் எவ்வாறு கலப்படங்கள் செய்யப்படுகிறது என உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மாணவர்கள் மத்தியில் செய்துகாட்டினர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் பேட்டியளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், 'மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை டெல்லி, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் எட்டு பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவினர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆய்வு செய்யவுள்ளனர்.
யுனானி, சித்தா உள்ளிட்ட மருத்துவ இடங்களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சீட் வழங்கப்படுமா அல்லது நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சீட்கள் வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை. நிபா வைரஸை எதிர்கொள்ள அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன' என தெரிவித்தார்.