தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய மருந்து! - lockdown relaxation

சென்னை : தமிழ்நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனாவிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய மருந்து!
கரோனாவிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய மருந்து!

By

Published : Sep 30, 2020, 5:57 PM IST

சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இந்தியாவின் முதல் அதிநவீன ’அக்விலியன் ஓன் பிரிஸம் 640 சி.டி.ஸ்கேன் வசதி’ஐ மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப்.சி.ரெட்டி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

அதிநவீன அக்விலியன் ஓன் பிரிஸம் 640 சி.டி.ஸ்கேன் வசதியை பார்வையிடும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "அப்போலோ மருத்துவமனை, 640 ஸ்லைஸ் சிசிடி ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் எம்ஆர்ஐ சிடி ஸ்கேன் போன்ற அதிநவீன கருவிகள் மகத்தான பங்கினை வகிக்கின்றன. கரோனா தொற்று காலத்தில் ஆர்டி பிசிஆர் பரிசோதனையை மட்டும் செய்கிறோம். அதில் நெகட்டிவ் வரும் நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் மூலம் நுரையீரல் தொற்று பாதிப்பினை கண்டறிகிறோம். இன்றைய காலகட்டத்தில் அதிநவீன கருவிகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் அதி நவீனக் கருவிகளை பொருத்தி மருத்துவ வசதியை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. பொது முடக்கத்தில் தளர்வு அளிக்கப்பட்ட பின்னர் சென்னையில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. புதிய நோயான கரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதற்கு ஒரே மருந்து முகக்கவசம் மட்டுமே.

எனவே பொதுமக்கள் அனைவரும் எப்போதும் முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். மக்கள் இந்த நோயைக் கண்டு பீதி அடைய வேண்டாம். இருமல், மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல், சுவையின்மை போன்ற அறிகுறிகள் ஒருநாள் இருந்தால்கூட உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். அவ்வாறு வந்தால் இந்த நோயினை எளிதில் வெல்ல முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அக்.7 அதிமுக, முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பில்லை' - நயினார் நாகேந்திரன் ஆரூடம்

ABOUT THE AUTHOR

...view details