தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 45,222 குழந்தைகளுக்கு சிகிச்சை'

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 222 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar
vijayabaskar

By

Published : Sep 17, 2020, 5:44 PM IST

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, "கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்று காலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இதர மருத்துவ சேவைகள் பாதிக்க கூடாது என்பதால் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றினால் பெற்றோருடன் அனுமதிக்கப்பட்ட 30 குழந்தைகளும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளனர்.

சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய 455 குழந்தைகள், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 25 குழந்தைகள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள், பிறவி இருதய குறைபாட்டுடன் கூடிய மூன்று குழந்தைகள், சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகள், நிமோனியா பாதித்த எட்டு குழந்தைகள், பிறவி குறைபாடுடன் கூடிய ஐந்து குழந்தைகள், குடல்வால் உள்ளிட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ஐந்து குழந்தைகள் மற்றும் தீவிர தொற்றுடன் பாதிக்கப்பட்ட 10 பச்சிளம் குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு மொத்தம் 944 குழந்தைகளுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இதைத் தவிர தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 222 குழந்தகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாடு திரும்பிய 85,348 தமிழர்கள்: மத்திய அரசு தகவல்

ABOUT THE AUTHOR

...view details