தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வார்டு மருத்துவர்கள், செவிலியருடன் அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்துரையாடல் - கரோனா வார்டு மருத்துவர்கள், செவிலியருடன் அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்துரையாடல்

சென்னை: கரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துரையாடினார்.

Minister Vijaya Bhaskar's discussion with Corona Ward doctors and nurses
Minister Vijaya Bhaskar's discussion with Corona Ward doctors and nurses

By

Published : Apr 13, 2020, 4:44 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதுவரை 1,075 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழ்நாட்டில் பாதிப்பு குறையவில்லை என்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது 144 தடை உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனோ வைரஸ் கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர் ஆகியோருடன் கலந்தாலோசித்தார்.

கலந்துரையாடும் அமைச்சர் விஜய பாஸ்கர்

அவர்களிடம் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், சிகிச்சைகள் குறித்து கலந்தாலோசித்தார். மேலும் அவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details