தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீட்புப் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலர் திருப்புகழ் தலைமையிலான மத்தியக் குழுவினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அக்குழுவினர் ஆய்வுமுடிந்து டெல்லி சென்றனர்.
மத்தியக் குழு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆலோசனை! - அமைச்சர் விஜய பாஸ்கர்
சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், மத்தியக் குழு மண்டல இயக்குநர் டாக்டர் ரோஷினி தலைமையிலான குழுவினரைச் சந்தித்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தார்.
Minister Vijaya Baskar
அதன்பின் டெல்லியிருந்து மத்தியக் குழு மண்டல இயக்குநர் டாக்டர் ரோஷினி தலைமையிலான மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் மேற்கொண்டு வரும் கரோனா சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிகிச்சை குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் 144 உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட காவல் ஆணையர்!