தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரேஷன் அட்டையை மாற்ற உதவுங்கள்' - 'வாய்ஸ்' கொடுத்த அமைச்சர் - tamilnadu new ration card Minister Vijaya Baskar

சென்னை : சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற அதிமுகவினர் பொது மக்களுக்கு உதவ வேண்டும் என அமைச்சர் விஜய பாஸ்கர் கேட்டுக்கொள்ளார்.

vijaya Baskar, விஜய பாஸ்கர் ரேஷன் அட்டை, அமைச்சர் விஜய பாஸ்கர்
minister vijaya Baskar

By

Published : Nov 26, 2019, 12:48 PM IST

சர்க்கரை மட்டும் வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், அதனை அரசி பெறக்கூடிய ரேஷன் அட்டையாக மாற்றலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதற்காக, இணையதளத்திலோ, சம்பந்தப்பட்ட வழங்கல் அலுவலர்களிடமோ இன்று (நவம்பர் 26ஆம் தேதி) வரை விண்ணபிக்க கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ரேஷன் அட்டை மாற்றுவதற்கு பொது மக்களுக்கு உதவ வேண்டும் என அதிமுகவினருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநர் அவசரம் காட்டியது ஏன்? - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி

இதுகுறித்து வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜில் அவர் தெரிவித்துள்ளதாவது: ' சர்க்கரை ரேஷன் ஸ்மார்ட் அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்ற இன்று ( நவ.26) இரவு 12 மணி வரை பொதுமக்கள் விண்ணபிக்கலாம். இதற்கு ஆன்லைனிலோ அல்லது உரிய அரசு அலுவலர்களிடமோ விண்ணப்பிக்கலாம்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் வாட்ஸ் அப் வாய்ஸ் கால்

ஆகையால், தங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details