கரோனா தொற்று காலத்தில் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் முறையாகக் கிடைக்கப்பெறுகிறதா என கண்டறிந்து உறுதிபடுத்துவது தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடைகோடி மக்களுக்கும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்; அமைச்சர் வேலுமணி - சென்னை மாவட்ட செய்தி
சென்னை: கடைகோடி மக்களுக்கும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![கடைகோடி மக்களுக்கும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்; அமைச்சர் வேலுமணி minister Velumani tweeter post](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:10:30:1594194030-tn-che-05-minister-velumani-tweeted-regarding-water-supply-7204894-08072020130656-0807f-1594193816-200.jpg)
minister Velumani tweeter post
அந்தப் பதிவில், "சென்னை குடிநீர் வாரியம் & தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, கூட்டு குடிநீர் திட்டங்களில் கடைக்கோடி கிராம மக்களுக்கும் போதுமான அளவில் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவியிடம் ஆபாசப் பேச்சு - உதவிப் பொறியாளர் பணியிடை நீக்கம்!