தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அம்மா மினி கிளினிக் திட்டத்தால் சென்னையில் 5,864 பேர் பயன்’ - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! - அமைச்சர் வேலுமணி

சென்னை: அம்மா மினி கிளினிக் திட்டத்தின் மூலம் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 864 பேர் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

By

Published : Dec 29, 2020, 7:53 PM IST

தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவ மழை, நிவர், புரெவி புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.29) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை, நிவர், புரெவி புயல் தாக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, அதற்கான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

அம்மா மினி கிளினிக்கால் பயனடைந்த மக்கள்:

மேலும், “ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு அருகிலேயே மருத்துவ சிகிச்சைகளைப் பெற முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டத்தை டிச.14ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் தொடங்கிவைத்தார். இந்த அம்மா மினி கிளினிக் சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் ஏற்படுத்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், சென்னையில் டிச.28ஆம் தேதி வரை 38 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 5 ஆயிரத்து 864 நபர்கள் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர். கரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சையளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், அம்மா மினி கிளினிக் திட்டமானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அம்மா மினி கிளினிக் விரைந்து தொடங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நாமக்கல் சாலையோர வியாபாரிகள் கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details