தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரே நாளில் 161 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற ஊராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.