தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணி, பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 15) வேட்புமனு தாக்கல்செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கு அற்புதமான திட்டங்கள் தந்து எளிமையான முதலமைச்சராக அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியாக அனைத்து குடும்பங்களுக்கும் வாஷிங் மெஷின், இலவச கேபிள் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளது மட்டுமின்றி எதைச் சொன்னாலும் நிறைவேற்றும் முதலமைச்சராக உள்ளார்.