சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (26.9.2022) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவை, கொரிய நாட்டின் முன்னணி சிவில் பொறியியல் குழுவினர், கொரியா இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் கார்ப்பரேஷன் (கேஇசிசி) ஆலோசகர் ஜயாங் இம் தலைமையில் சந்தித்து பொறியியல் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
தற்போது, கொரியாவில் நடைமுறையில் உள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, விரைவாகவும், எளிதாகவும் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், இதுவரை பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் தொடங்கவுள்ள பல்வேறு சிவில் பொறியியல் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.