சென்னை:மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவ சிலைக்கும் கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சாமிநாதன், தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது, "பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அண்ணா ஆட்சிக்காலத்தில்தான் பாரதியாரின் சிலை அமைக்கப்பட்டது என்றார்.