சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில், கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இந்தியாவில் அதிக கரோனா பரிசோதனை செய்கின்ற மாநிலத்தில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தற்போது அனைத்து மாவட்டத்திலும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெளிவாக தெரிவித்துள்ளார்.
அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் வாக்குகளை கைப்பற்ற, தரம் தாழ்ந்த அரசியலை எதிர்க்கட்சிகள் செய்கின்றன. மூன்றாவது முறையாக அதிமுக அரசு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் துணையுடன் எந்தக் குழப்பமும் இல்லாமல் அதிமுக ஆட்சி தொடரும்" எனத் தெரிவித்தார்.
வாக்கிற்காக தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்: அமைச்சர் குற்றச்சாட்டு
சென்னை: அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் வாக்குகளைக் கைப்பற்ற தரம் தாழ்ந்த அரசியலை எதிர்க்கட்சிகள் செய்வதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு