சென்னை: தலைமைச் செயலகத்தில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை குறித்த ஆய்வுக்கூட்டம் அத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.17) நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்பாட்டுக்கு வந்துள்ள திட்டங்கள், முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துறை சார்ந்த அலுவலர்கள், பிபிடி மூலமாக தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்பான முழுமையான தகவல்களை வழங்கினர்.