மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தனர்.
மேலும், மத்திய நிதித்துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாட் ஜோஷி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை இணைஅமைச்சர் ஆர்.கே. சிங் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மின்சாரம் தொய்வின்றி வழங்குவதற்கு தேவையான நிலக்கரி மற்றும் சிறப்பு நிதி ஒதுத்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக திருவள்ளுர் மாவட்டத்தில் நடந்து வரும் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கான பணிகள் தாமதமின்றி தொடர, சுற்று சூழல் அனுமதியை புதுப்பித்து வழங்க கேட்டுக்கொணடனர்.