தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பன்னீரில் 'ன்' உள்ளது, பழனிசாமியில் 'ழ' உள்ளது: அமைச்சரின் கலகல பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் எழுத்துக்களின் பெருமைகள் குறித்து பேசியபோது அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பெயரில் உள்ள பன்னீரில் " ன் " இருக்கிறது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பெயரில் " ழ " இருக்கிறது என்றும் கூறி " ன் ", " ழ "  தமிழ் எழுத்துக்களின் பெருமை எனக் கூறினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

By

Published : Apr 19, 2022, 7:54 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 19) தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ் மொழியில் 3000 ஆண்டுகளாக என்ன சொல்லைப் பயன்படுத்துகிறோமோ அதை இன்றும் பயன்படுத்தி வருகிறோம்.

தமிழ் தனித்து இயங்க கூடிய மொழி. உதாரணத்திற்கு " ன் " என்ற எழுத்து அசோகனின் பிராமியில் கிடையாது. ஆனால், கீழடி அகழாய்வில் ஆதன் என்ற இடத்தில் " ன் " வருகிறது என்றால், அசோக காலத்திற்கும் முற்பட்டு தமிழ் இருந்தது என்பதை இந்த எழுத்து காட்டுகிறது. அந்த " ன் " இன்றும் தொடர்ந்து வருகிறது.

அன்று கிடைத்த " ன் " தான் இன்றைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பெயரில் உள்ள பன்னீரில் " ன் " இருக்கிறது. அவை முன்னவர்(துரைமுருகன்) பெயரிலும் " ன் " என்றே முடிகிறது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற பெயரிலும் " ன் " வருகிறது" என்று தெரிவித்தார். இந்த " ன் " சிறப்பு நம் தமிழுக்கு கிடைத்த பெருமை.

அதே போல் தமிழில் பல எழுத்துகள் உள்ளன. " ழ " என்ற எழுத்து எந்த மொழியிலும் இல்லை. நம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பெயரில் அந்த " ழ " எழுத்து வந்து அந்த பெருமையை அவர் பெற்றுள்ளார். " ன் ", " ழ " ஆகியவை தமிழ் எழுத்துகளின் பெருமை என்றார்.

இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, " அமைச்சர் " ன் " எழுத்து இங்கு என் பெயரில் வருவதாக சொன்னார். அவர் பெயரிலும் " ன் " வருகிறது, அந்த பெருமையை அவரும் பெற்றுள்ளார்" என்றார்.

இதனால் சட்டப்பேரவை கலகலப்பானது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2 சூரியன்கள் ஆள்கின்றன - தருமபுரம் ஆதீனம்; இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன் - ஆளுநர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details