தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 69 சதவீதமாக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு

Minister Thangam Thennarasu: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 69 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 3:41 PM IST

சென்னை:தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கும் விதமாக மாநில திட்டக் குழு அலுவலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் உற்பத்தி மதிப்பில் நிலைத்து உள்ளது.அதேபோல் மத்திய அரசின் உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கானது 9.0 சதவீதமாகவும் உள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதாரமாகவும், நிலைத்த விலையில் 3-வது பெரிய பொருளாதாரமாகவும் திகழ்கிறது.2022-23-ம் ஆண்டில் மற்ற மாநிலங்களுக்கான தரவுகள் நம்மிடம் வராததால் இன்னும் அந்த ஒப்பீடு செய்யக் காத்திருக்க வேண்டி சூழ்நிலை உள்ளது. ஒட்டுமொத்த மாநில பொருளாதாரம் 2021-22-ல் 7.2 சதவீத அளவிலும் 22-23-ம் ஆண்டில் 8.1 என்ற அளவிலும் வளர்ச்சி உள்ளது.

மாநிலப் பொருளாதாரம் 2021-22-ல் நிலைத்த விலையில் 7.92 சதவீத அளவிலும், 22-23-ம் ஆண்டில் 8.19 என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானமும் அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் 67 சதவீதமாக இருந்த தனிநபர் வருமானம் 69 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதாவது 2021-22-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 557 ஆக இருந்த ஆண்டு வருமானம் 2022-23-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ஆக வருமானம் அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்குப் பிறகு வளர்ச்சி வேகம் பிடித்துக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சராசரியாக 8%சதவீதம் என்ற அளவில் நமது பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.மேலும் தனிநபர் ஆண்டு வருமானம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது, இதற்கு 2 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சரின் அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களே காரணம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பேசுகையில் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் 900 ரூபாய் ஒரு குடும்பத்திற்கு செலவு குறைந்துள்ளது என்று ஆய்வு முடிவில் தெரியவந்தது. அதேபோல் தான் காலை உணவு சிற்றுண்டி திட்டம் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்று ஆய்வு செய்த பிறகு தான் தெரியும் என்றார். மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடு குறித்து மூன்று மாதத்திற்கு பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் தரம் கண்டறியப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Jan Dhan Yojana: இந்தியாவின் நிதி சேர்ப்பு கொள்கையில் மாபெரும் புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்.!

ABOUT THE AUTHOR

...view details