தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் விலக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" - அமைச்சர் தங்கம் தென்னரசு - நிலக்கரி சுரங்கம் குறித்து பேசிய அமைச்சர்

டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதிலிருந்து விலக்கு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 8, 2023, 5:00 PM IST

சென்னை:ஏப்ரல் 11 ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு ஊழியர்களுடைய பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு ஜாக்டோ ஜியோ ஆகும். அவர்கள் தலைமை செயலகத்தை வருகிற 11 ஆம் தேதி முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு தற்போது 3 அமைச்சர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்று, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது.

மேலும், கடந்த 2 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஓய்வூதியம், அகவிலை படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் அடிப்படையில், ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஏப்ரல் 11 ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்த நிலையில் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து செய்தியாளிடம் பேசிய அமைச்சர் எவ. வேலு, “ஜாக்டோ ஜியோ உடன் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், கோரிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்தில் இதனை கொண்டு செல்வோம் என்று தெரிவித்தோம்.

ஜாக்டோ ஜியோ சொன்ன கோரிக்கை எல்லாத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார். டெல்டா மாவட்டத்தில் நிலகரி எடுப்பது குறித்து எப்போது அறிவிப்பு வந்ததோ, அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு நேரடியாக கடிதம் எழுதி ஒரு அழுத்தம் கொடுத்தார்கள். அந்த அழுத்தத்தின்படி, தற்போது டெல்டா மாவட்டங்களில் நிலம் எடுப்பது இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது” என தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி, “டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதிலியிருந்து விலக்கு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் நிலக்கரி சுரங்க அமைச்சருக்கு கடிதம் எழுதினார். மேலும், இது குறித்து நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலுவிடம் உடனடியாக அலைபேசியில் தொடர்பு கொண்டு, நிலக்கரி சுரங்கத் அமைச்சர் சந்தித்து, இதிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவாக இது குறித்து அறிவித்தார். தற்போது மத்திய அரசுக்கு இந்த அளவுக்கு டெல்டா மக்கள் மீதும் அக்கறை வந்திருப்பதால் திருப்தி அடைகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நெடுஞ்சாலை நடுவே சடலத்தை எரித்த மக்கள்.. திருவள்ளூரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details