தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகம் நடத்தப்படும், தமிழின் வேர் தேடி இந்திய அளவிலும், உலக அளவிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ”110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பு தமிழ் மொழியின் வரலாற்றில் மிகவும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. தமிழர் நாகரிகத்தில் உள்ள தொன்மையை இப்போது இருக்கக்கூடிய காலங்களுக்கு மிக முன்னதாக எடுத்துச் செல்லக்கூடிய அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகள் வெளிவந்து இருக்கக் கூடிய நிலையில்;
அவற்றை சட்டப்பேரவையில் வெளியிட்டு தமிழின் தொன்மையும் 3700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அமைந்திருக்கிறது என்கின்ற உண்மையை அறிவியல பூர்வமாக நிரூபிக்கும் விதமாக முதலமைச்சரின் அறிவிப்பு இருக்கிறது.
கால கணக்கீடுகளின் அடிப்படையில் 1200 வருடங்களுக்கு முன்பாக தமிழரின் நாகரிகம் இருந்தது என்பது இந்த அகழாய்வு மூலம் அறியப்பட்டுள்ளது. 13 எழுத்துக்கள் கொண்ட சொற்றொடர் கீழடியில் கிடைக்கப்பெற்ற பானை ஓடுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் ஆய்வு