தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு இசை கல்லூரிகளில் தவில், நாதஸ்வரம் பிரிவுகளில் பட்டப்படிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு - minister thangam thennarasu

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக கலாச்சார பரிமாற்ற திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 15 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தப்படும் என கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 20, 2023, 7:07 AM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலைப்பண்பாட்டு துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:

  • தமிழ்நாட்டின் கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கவும் அவற்றை வளர்க்கவும் 200 அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கலை பயிற்சிகள் 1.70 கோடி செலவில் வழங்கப்படும்.
  • சென்னை மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளில் தவில் மற்றும் நாதஸ்வரம் பிரிவுகளில் 18 லட்சம் செலவில் பட்டப்படிப்பு தொடங்கப்படும்.
  • சென்னை அரசு கவின் கலை கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று புதிய வகுப்பறைகள் மற்றும் நூலகம் 20 புள்ளி 92 கோடி செலவில் கட்டப்படும்.
  • கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் ஒன்று புள்ளி 97 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
  • புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 20 கூடுதல் சவகர் சிறுவர் மன்றங்கள் 58 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் திரையரங்கம் 50 லட்சம் செலவில் நவீன முறையில் மேம்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கலை படைப்புகள் 20 லட்சம் செலவில் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி பாதுகாக்கப்படும்.
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக கலாச்சார பரிமாற்ற திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 15 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தப்படும்
  • தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் நல்கை தொகையினை உயர்த்திடவும் அலுவலகத்திற்கான தளவாடங்கள் மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்திடவும் 1.9 கோடி ஒதுக்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details