தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு- அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

By

Published : Oct 5, 2022, 8:06 PM IST

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு- அமைச்சர் தா.மோ.அன்பரசன்
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு- அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டினை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் எம்.எஸ்.வி கண்காட்சியில் பங்கு கொள்ள 3.10.2022 அன்று இரவு செக் குடியரசு நாட்டிற்கு சென்றடைந்தார்.

அமைச்சரை 4.10.2022 அன்று செக் குடியரசு நாட்டின் தொழில் மற்றும் வணிக துறை அரசு செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் வரவேற்று தொழில் முதலீடுகள் குறித்தும், சுற்றுப்பயணம் விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.

அதனை தொடர்ந்து அமைச்சரும், MSME குழுவினரும் EVEKTOR விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையையும், கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையினையும் பார்வையிட்டார்கள். இந்த ஆய்வின் போது அமைச்சர் அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த ஆய்விற்கு பிறகு எம்.எஸ்.வி கண்காட்சி அரங்கிற்கு சென்று அரங்கினை பார்வையிட்டார்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details