தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடந்த 2 நாட்களில் இதுவரை இல்லாத அளவு அதிக பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் - about pongal buses

Pongal Special buses: பொங்கல் பண்டிகைக்காக கடந்த இரண்டு நாட்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் தகவல்
கடந்த 2 நாட்களில் இதுவரை இல்லாத அளவு அதிகப்படியான பேருந்துகள் இயக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 3:30 PM IST

சென்னை:2024 பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், கடந்த இரண்டு நாட்களில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் மாநிலம் முழுவதும், மொத்தமாக 20,084 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நகரப் பேருந்துகள் மட்டும் 9,620 ஆகும். மாவட்ட தடப் பேருந்துகள் 9,103. மேலும் இதர பேருந்துகள் 1,361 என மொத்த 10,464 பேருந்துகள் உள்ளன.

இதில் நேற்று ஒரு நாள் மட்டும் பொங்கல் கொண்டாட சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 4,446 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகபட்சமான இந்த பேருந்துகள், தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து ஒரு நாளில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், “பொங்கல் மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்களில் வெளியூர்களில் பணியாற்றும் மக்கள், பண்டிகைகளை சொந்த ஊர்களில் கொண்டாட பண்டிகைக்கு முன் உள்ள மூன்று நாட்களில் பயணிப்பர். நாள் ஒன்றுக்கு சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை பயணிகள் பயணம் செய்வர்.

இந்நிலையில், இந்த வருட பொங்கல் திருநாளுக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும், சுமார் 4.34 லட்சம் பயணிகள் பேருந்தில் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே, நேற்று (ஜன.13) தங்கள் ஊர்களுக்குச் செல்ல இருந்த பயணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. மொத்தமாக, 1 லட்சத்து 44 ஆயிரத்து 778 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.

இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணித்திட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பண்டிகை சிறப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், எனது தலைமையிலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையிலும், காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் சார்பிலும், பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுகளுக்குச் சென்று மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளைக் கொண்டாடிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பார்வையிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தக்க அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை பார்வையிட்டு, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: சனாதன பொங்கல் விழாவில் திமுக எம்.எல்.ஏ.! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டி.குருமூர்த்தி

ABOUT THE AUTHOR

...view details