மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் மூத்தச் சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் (104) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
அமைச்சர் எஸ். பி. வேலுமணி தனது இரங்கல் ட்வீட்டில், "முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் சகோதரர் திரு. முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமான செய்தியறிந்து கவலையடைந்தேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.