தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பால் விலைக் குறைப்பு: சொமேட்டோ, டன்சோ மூலம் வீட்டில் விற்பனை செய்ய ஏற்பாடு! - ZOMATO

நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் விலைக் குறைக்கப்பட்ட ஆவின் பால் விற்பனையை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

Minister S.M. Nasser
அமைச்சர் சா.மு.நாசர்

By

Published : May 16, 2021, 2:36 PM IST

சென்னை முழுவதும் எவ்வித தடையுமின்றி பால், பால் உபபொருட்கள் நுகர்வோர் இல்லங்களுக்கு விநியோகம் செய்வதற்காக இணையதள சேவையான சொமேட்டோ (ZOMATO), டன்சோ (DUNZO) மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஐந்து முக்கிய அரசாணைகள் பிறப்பித்தார். அதில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் விலை குறைக்கப்பட்ட பால் விற்பனையை இன்று(மே16) தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில்,

பொதுமக்கள் ஆவின் பார்லர்கள், சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து இன்று (மே.16) முதல் ஆவின் பால் பெற்றுக்கொள்ளலாம்.

சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் சில்லறை விற்பனை விலையில் 40 ரூபாய்க்கும், பால் அட்டைக்கு 37 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

சமன்படுத்தப்பட்ட பால் 500 மில்லி லிட்டர் சில்லறை விற்பனை விலையில் 20 ரூபாய்க்கும், பால்அட்டைக்கு 18 ரூபாய் 50 பைசாவுகும் விற்பனை செய்யப்படும்.

நிலைப்படுத்தப்பட்டப் பால் 500 மில்லி லிட்டர் சில்லறை விற்பனை விலையில் 22 ரூபாய்க்கும், பால் அட்டைக்கு 21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

நிறை கொழுப்பு பால் 500 மில்லி லிட்டர் சில்லறை விற்பனை விலையில் 24 ரூபாய்க்கும், பால் அட்டைக்கு 23 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

இருமுறை சமன்படுத்தப்பட்டப் பால் 500 மில்லி லிட்டர் சில்லறை விற்பனை விலையில் 18 ரூபாய் 50 பைசாவுக்கும், பால் அட்டைக்கு 18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

தற்பொழுது நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைக்கு உண்டான வித்தியாச தொகையை அடுத்த மாதம் பால் அட்டை விற்பனை செய்யும் போது ஈடு செய்யப்படும்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது மக்களுக்கு சென்னை முழுவதும் எவ்வித தடையுமின்றி பால், பால் உபபொருட்கள் கிடைக்க ஆவின் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்கு விநியோகம் செய்வதற்காக இணையதள சேவையான ஸொமேட்டோ (ZOMATO), டுன்சோ (DUNZO) மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் நந்தனம் மேலாண்மை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:044-23464575, 23464576, 23464578, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3300 எனவே இதனை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து.

இதையும் படிங்க: இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆவின் பால் விலை குறைப்பு!

ABOUT THE AUTHOR

...view details