தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பண்டிகை நாள்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது’ -அமைச்சர் சிவசங்கர் உறுதி - பண்டிகை கால சிறப்பு பேருந்து கட்டணம் உயராது

பண்டிகை நாள்களில் ஆம்னி பேருந்து கட்டணம் நிச்சயம் உயராது. அரசுப் பேருந்துகள் தற்போது இருக்கும் கட்டணத்திலேயே இயங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.

பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது -அமைச்சர் சிவசங்கர் உறுதி
பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது -அமைச்சர் சிவசங்கர் உறுதிபண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது -அமைச்சர் சிவசங்கர் உறுதி

By

Published : Sep 28, 2022, 10:42 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்வரும் மழை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கத்தை முறையாக நடத்த கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கரோனாவிற்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை கணக்கில் கொண்டு கூடுதலாக மாணவர்கள் பயணிக்க தேவையான பேருந்து வசதிகள் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையுடன் இணைந்து புதிய வழித்தடங்களை கண்டறிந்து பேருந்துகள் இயக்கி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் (செப் 30, 1300 பேருந்துகளும் & அக்டோபர் 1 ஆம் தேதி) ஆயிரத்து 100 பேருந்துகள் என கூடுதலாக 2ஆயிரத்து 400 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். தீபாவளிக்கு ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். தீபாவளி சிறப்பு பேருந்து அறிவிப்பு விரைவில் வரும். பேருந்தில் இலவசமாக பெண்கள் பயணம் இந்தியாவில் இல்லாத மகத்தான திட்டம் என அறிவித்தார்.

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இந்த திட்டம் குறித்து உரிய அறிவுரையை மேலாளாண் இயக்குநர்கள் மூலம் வழங்கியுள்ளோம். வெள்ளிக்கிழமை பயணம் தொடங்கும் போது ஆம்னி பேருந்து கட்டணம் குறைந்து இருக்கும். அறிவிப்புக்கு காத்திருக்கிறோம். அவர்கள் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்கள். பேருந்து கட்டணம் நிச்சயம் உயராது. அரசு பேருந்துகள் தற்போது இருக்கும் கட்டணத்திலேயே இருக்கும், கட்டணம் உயராது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘பருவமழைக்கான முன்னெச்சரிக்கைகள் துரிதமாக இருக்கும்’ - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details