தீபாவளி பண்டிகையையொட்டி, கோயம்பேடு பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் சிவசங்கர், ''வழக்கமாக இயங்குகின்ற 2,100 பேருந்துகளை தவிர்த்து நாளை 1,586 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 1,195 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
கடந்தாண்டு தீபாவளியில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரமாக உள்ளது. இந்தாண்டு 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல, பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையும் கூடுதலாகும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூடுதலான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.